வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஜி20 அமைப்பால் தீர்வு காண முடியும் என்பதை டில்லியில் நடந்த மாநாடு நிரூபித்துள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார். பிறகு நேற்று இரவு ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்திலும் அவர் பங்கேற்றார்.
மாநாட்டு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் வியட்நாம் கிளம்பி சென்றார். அவரை அமெரிக்க பிரதிநிதிகள் வழியனுப்பி வைத்தனர்.
அதற்கு முன்னதாக ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பருவநிலை மாற்றம் மற்றும் குழப்பங்கள் காரணமாக உலக பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், டில்லியில் நடந்த மாநாடானது, உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளுக்கு ஜி20 அமைப்பால் தீர்வு காண முடியும் என்பதை நிரூபித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement