ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான லிவோ 110 பைக் மாடல் E20 மற்றும் OBD2 மேம்பாடு கொண்டதாக உள்ள பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
2023 Honda Livo
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கில் உள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற லிவோ 110 பைக் OBD-2 மற்றும் E20 மேம்பாடு பெற்ற 109.51cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7500rpm-ல் 8.67 hp பவர் மற்றும் 9.30 Nm at 5500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
முன்புற டயரில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் பெற்று மற்றும் பின்பக்கத்தில் டயரில் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது. 80/100-18 M/C 47P டீயூப்லெஸ் டயர் இரு பக்கமும் கொண்டுள்ளது. டைமண்ட் வகை சேஸ் கொண்ட ஹோண்டா லிவோ 110 பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.
புளூ மெட்டாலிக், மேட் க்ரஸ்ட் மெட்டாலிக் மற்றும் பிளாக் என மூன்று நிறங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த பாடிவொர்க் மாறாமல் இருந்தாலும், எரிபொருள் டேங்க் மற்றும் ஹெட்லேம்ப் கவுல் ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் மட்டும் கொண்டுள்ளது.
லிவோ 110 பைக்கின் பரிமாணங்கள் 2020mm நீளம், 751mm அகலம் மற்றும் 1,116mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1278mm வீல்பேஸ் பெற்று 163mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது.
HMSI நிறுவனம் சிறப்பு 10 ஆண்டு வாரண்டி தொகுப்பையும் (3 வருட நிலையான + 7 வருட விருப்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.
- Honda Livo 110 Disc – ₹ 81,200
- Honda Livo 110 Drum – ₹ 85,200
(Ex-showroom TamilNadu)
2023 ஹோண்டா லிவோ நுட்பவிபரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் ஆயில் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 47 mm X 63.121 mm |
Displacement (cc) | 109.51 cc |
Compression ratio | 10.1:1 |
அதிகபட்ச பவர் | 8.67 hp (6.47Kw) at 7500 rpm |
அதிகபட்ச டார்க் | 9.3 Nm at 5,500 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டைமண்ட் ஃபிரேம் |
டிரான்ஸ்மிஷன் | 4 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
பின்பக்கம் | ட்வின் ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | 130 டிரம் mm (CBS) |
பின்புறம் | 130 mm டிரம் |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 80/100-18 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 100/80-18 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V 4.0Ah MF |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப்/கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2020 mm |
அகலம் | 751 mm/ 742 mm (drum) |
உயரம் | 1,116 mm |
வீல்பேஸ் | 1,278 mm |
இருக்கை உயரம் | 790 |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 163 mm |
எரிபொருள் கொள்ளளவு | 9 litres |
எடை (Kerb) | 113kg |
ஹோண்டா லிவோ நிறங்கள்
2023 Honda Livo 110 on-Road Price Tamil Nadu
2023 ஹோண்டா லிவோ 110சிசி பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
2023 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை
- Honda Livo 110 Drum – ₹ 99,180
- Honda Livo 110 Disc – ₹ 1,04,890
(on-road price TamilNadu)
2023 Honda livo rivals
2023 ஹோண்டா லிவோ 110சிசி மாடலுக்கு போட்டியாக ஹீரோ பேஷன் பிளஸ், பேஷன் எக்ஸ்டெக், டிவிஎஸ் ரேடியான, ஸ்டார் சிட்டி மற்றும் ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் ஆகியவை உள்ளது.
Faqs About Honda Livo
2023 ஹோண்டா லிவோ 110 பைக்கின் என்ஜின் விபரம் ?
109.51cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7500rpm-ல் 8.67 hp பவர் மற்றும் 9.30 Nm at 5500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
2023 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை ?
ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 99,180 முதல் ₹ 1,04,890 ஆகும்.
2023 ஹோண்டா லிவோ பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?
2023 ஹோண்டா லிவோ பைக்கின் மைலேஜ் 59kmpl
2023 ஹோண்டா லிவோ போட்டியாளர்கள் யார் ?
லிவோ போட்டியாளர்கள் ஹீரோ பேஷன் பிளஸ், பேஷன் எக்ஸ்டெக், டிவிஎஸ் ரேடியான, ஸ்டார் சிட்டி மற்றும் ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் ஆகியவை உள்ளது.
2023 ஹோண்டா லிவோ வாரண்டி விபரம் ?
HMSI நிறுவனம் சிறப்பு 10 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பையும் (3 வருட நிலையான + 7 வருட விருப்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.