அப்பாவிற்கு பொறுப்புள்ள மகன், பாசக் கணவன், அன்புத் தம்பி, சிறந்த நடிகர்… என அத்தனைக்கும் உதாரணம் ஜெயம் ரவி. புதுமைகளை வரவேற்பதிலும் ஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் ரவிக்கு இன்று பிறந்தநாள்! அவரின் பர்சனல் பக்கங்கள் இதோ…
* கல்லூரியிலிருந்து படித்த நான்கு நண்பர்கள்தான் இப்பவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் நட்பில் இருக்கிறார்கள். ரவி எப்பவும் வீட்டுப்பிள்ளை. நடிகர்களில் ஜீவா, ஆர்யா என மனம் ஒருமித்து பழகுவார்கள்.
* வீட்டில் அப்பா எடிட்டர் மோகனும் அம்மாவும் அவரை ரவிக்குட்டி என்று தான் அழைப்பார்கள். வார்த்தைக்கு வார்த்தை டேய் ரவி என்று செல்லமாக அழைப்பது அண்ணன் ராஜாவும், சகோதரிகளும். கடைக்குட்டி என்பதால் எல்லோருக்கும் எக்கச்சக்க செல்லம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/62c4ddf5649ed.jpg)
* மூத்த மகன் ஆரவ் ஆறாவது வகுப்பில் நுழைந்துவிட்டார். இரண்டாவது மகன் அயான் மூன்றாவது வகுப்பில் படிக்கிறார். இருவரும் படிப்பது அமெரிக்கன் ஸ்கூலில்.
* ரவிக்கு ஆன்மிகத்தில் எம்மதமும் சம்மதம். அதுதான் அவரது எண்ணமாக எப்போதும் இருக்கும். ஆனாலும் ஐயப்பன் பக்தி அதிகம். வருஷத்திற்கு ஒரு முறை ஐயப்பன் கோயில் போவார்.
* நான்வெஜ் உணவுகளில் மிகுந்த பிரியமுண்டு. ஆனால் உடம்பை கட்டுக்குள் வைக்கிறபடி அவருக்கு இரண்டு படங்களுக்கு ஒரு முறையாவது படங்கள் அமைந்து விடுவது ஆச்சர்யம். பேராண்மை, கோமாளி, பொன்னியின் செல்வன் என கட்டுக்கோப்போடு உடம்பை பேணுவதால் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார். அவர் விரும்புவதை சாப்பிட முடியவில்லையே என அப்பா, அம்மா மனசு வருத்தப்படுவார்கள். அவர் விருப்பப்பட்டே அசைவ உணவுகளை அவ்வப்போது ஒதுக்கி வைப்பார்.
* சார்லி சாப்ளின் மிகவும் பிடித்த நடிகர். அதற்குப் பிறகுதான் பிராண்டோ, அல் பசினோ மிகவும் பிடித்த நடிகர்கள். அவர்கள் நடித்த படங்களை அடிக்கடி போட்டுப் பார்ப்பார். அப்பாவிடமிருந்து நல்ல படங்களின் பட்டியல் அடிக்கடி கிடைக்கும். தினம் ஒரு படம் நிச்சயம். கிளாசிக் படங்களை அதிகம் விரும்புவார்.
* அவரோடு நடிக்கக் கதாநாயகிகள் விரும்புவார்கள். அவரோடு நடித்த பிறகு நிறைய படங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும், ராசியும் பரவியது காரணம். இதில் ஜெனிலியா, நயன்தாரா, ஸ்ரேயா போன்றவர்கள் அந்த நம்பிக்கையின்படி வந்ததாக சொல்லப்படுபவர்கள்.
* இரண்டு ஆண் குழந்தைகள் செல்லமாக வளர்ந்தாலும் இன்னொரு குழந்தை மாதிரியே ஆர்ச்சர் என்ற நாய்க்குட்டியை வளர்க்கிறார். இரண்டு குழந்தைகளும் அவர் மேல் எக்கச்சக்க பிரியத்தில் இருப்பது மாதிரியே துளி குறையாமல் ஆர்ச்சரும் இருக்கும். அவுட்டோர் போய்விட்டால் ஆர்ச்சர் வாடிவிடும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/62d7a9a3c2fb7.jpg)
* ஸ்போர்ட்ஸ் படங்கள், பாக்ஸர், போலீஸ், மிலிட்டரி படங்கள் என கதைகள் செய்தால் அதிகமும் ஜெயம் ரவியை தான் தேடி வருகிறார்கள். ரவியும் அந்த மாதிரி படங்களை விரும்பி, அதற்கேற்றபடி தன்னை முழுதாக மாற்றிக்கொண்டு நடிப்பார்.
* நடனம், குதிரை ஏற்றம், சண்டை பயிற்சியில் சினிமாவில் வருவதற்கு முன்பே நிறைவாக பயிற்சி எடுத்துவிட்டார்.
* ‘தனி ஒருவன் 2’ மாதிரியே ‘மிருதன் 2’ வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் இன்னும் அதைப் பற்றிய அறிவிப்பு வரவில்லை.
* இப்போதே மகன் ஆரவ் சினிமாவில் ஆர்வமாக இருக்கின்றார். அப்பா படங்களில் ஆடுகிற நடனங்களை சுருதி பிசகாமல் ஆடி அவரையே ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறார்.
* பிறந்த நாளில் அப்பாவையும், அம்மாவையும் பார்த்து ஆசி வாங்கிவிட்டு தான் மறுவேலை பார்ப்பார். அக்கா, அண்ணன் வீடுகளுக்கு போய் அவர்களோடு இருந்துவிட்டு தான் மனைவி குழந்தைகளோடு வெளியே போவார்.
* எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிற மொழி படங்களில் நடிக்க சம்மதிப்பது இல்லை ரவி. இதுவரைக்கும் ஏனோ தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார்.
* மலையாளப் படங்கள் பிடிக்கும். அந்த நடிகர்களின் இயல்பான நடிப்பு பற்றி பெருமையாக பேசுவார்.
* கார்களின் காதலன். புதுசாய் வரும் எந்த காரையும் மனம் விரும்பி விட்டால் அந்த கார் வாசலில் வந்து விடும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/62bc3c4bb649e.jpg)
* லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்திருக்கிறார். மும்பைக்கு போய் நமித் கபூரின் புகழ்பெற்ற ஆக்டிக் ஸ்கூலில் ஒரு வருடம் படித்திருக்கிறார்.
* வருஷத்திற்கு ஒரு தடவையாவது கொஞ்ச நாட்கள் வெளிநாட்டு ட்ரிப் கண்டிப்பாக உண்டு. எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது எல்லாம் மனைவியும், ஆரவ்வும் தான். இப்போது அயானின் கருத்தும் கேட்கப்படுகிறது.
* அவரை மையப்படுத்தி சினிமாவில் வேரூன்ற காரணமாக இருந்த வகையில் அப்பாவின் மேல் தனித்த பாசம் உண்டு. மகனை ஹீரோவாக்கவே கொடிகட்டிப் பறந்த ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்தார் எடிட்டர் மோகன். அப்பாவைப் பற்றிப் பேசுகையில் அதை கண் மலர்ந்து குறிப்பிடுவார் ரவி.
* பொன்னியின் செல்வனாக பிரதான வேடமேற்ற விதத்தில் ரவி மிகவும் பெருமைப்படுவார். எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் வரைக்கும் விரும்பிய ரோலை தான் செய்ய முடிந்தது பெரும் பேறு என்பார்.
பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெயம் ரவி!
ஜெயம் ரவி படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!