ஆசியகோப்பை 2023: கொழும்பில் மீண்டும் மழை, இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா?

இந்தியா- பாகிஸ்தான் மோதல்

ஆசிய கோப்பை 2023 போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகின்றன. இதில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் மோதின. டாஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் 70க்கும் மேற்பட்ட முறையிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் 50க்கும் மேற்பட்ட மேட்சுகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதனடிப்படையில் பார்க்கும்போது டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கையே தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி அபார ஆட்டம்

அதன்படி ஓப்பனிங் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சை எதிர்கொண்டனர். நசீம் பவுலிங்கில் மட்டும் கொஞ்சம் தடுமாறிய ரோகித் பின்னர் அவருடைய பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட தொடங்கினார். மறுமுனையில் ரோகித் சர்மாவுக்கு போட்டி கொடுக்கும் வகையில் சுப்மான் கில் அதிரடியாக ஆடினார். இதனால் இருவருமே அரைசதம் விளாசினர். ஆனால் அவர்கள் அதன்பிறகு அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. களத்தில் விராட் கோலியுடன் கே.எல் ராகுல் இருக்கிறார்.

கொழும்பில் பலத்த மழை

Rizwan having a fun chat with ground staff.
zyJohns) September 11, 2023

தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் நடக்கவில்லை. அதனால் மைதானத்தை ஆய்வு செய்த கள நடுவர்கள் போட்டியை ரிசர்வ் நாளான இன்றுக்கு ஒத்திவைத்தனர். ஆனாலும் இன்றும் மழை அங்கு தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. இப்போதைய சூழலில் கொழும்பு பிரேமதாசா மைதானம் மழையால் மூடி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இன்றும் ஆட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை போட்டி நடக்கவில்லை என்றால் இன்று ரத்து செய்யப்பட வேண்டியிருக்கும்.

அஸ்வின் ரியாக்ஷன்

winravi99) September 11, 2023

இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொழும்பு மைதானத்தின் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். மைதானத்தில் மழை பெய்து கொண்டிருப்பதால் மூடி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது ராஜா சார் மியூசிக்கையாவது கேட்டுக் கொண்டிருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை லீக் சுற்றில் மோதிய போட்டியும் மழையால் கைவிடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.