எங்கள் குழு பதிலளிப்பார்கள் : ஏஆர் ரஹ்மான் அறிவிப்பு

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நேற்று சென்னையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசைக் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். சரியான ஏற்பாடுகளைச் செய்யாமல் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பலரும் நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் அவதிக்குள்ளாகி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்க தனது டுவிட்டர் தளத்தில் அவருடைய பயோ-வை 'நிர்வாகி' நிர்வகிப்பதாக மாற்றினார். அதற்கும் ரசிகர்கள் கண்டனங்களைத் தெரிவிக்க ரசிகர்களின் எதிர்ப்புகளுக்குப் பணிந்தார்.

இப்போது, “அன்பான சென்னை மக்களே, டிக்கெட் வாங்கி, தவிர்க்க முடியாத சூழலால் நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், உங்களது டிக்கெட் காப்பியையும் உங்களது குறையையும் அனுப்பி வைக்கவும். எங்களது குழுவினர் உடனடியாக பதில் கொடுப்பார்கள்,” என டுவீட் செய்துள்ளார்.

ஆனாலும், டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தருவோம் என அதில் குறிப்பிடவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.