கலைநிகழ்ச்சி சர்ச்சை : டுவிட்டரில் 'பயோ' மாற்றிய ஏஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் நேற்று சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். திறந்தவெளியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருந்துள்ளன. அதிக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் கூட நிகழ்ச்சியை சரியாகப் பார்க்க முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். பலர் விழா நடக்கும் அரங்கிற்குள்ளும் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர்.

நேற்று மாலையிலிருந்தே இது குறித்து ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் பலர் வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் கடும் குற்றச்சாட்டுக்களை எழுப்பினர். அதன்பின் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் சற்று முன், “சென்னைக்கும் சாதனையாளர் ஏஆர் ரகுமானுக்கும் நன்றி. நம்பமுடியாத வரவேற்பு, அபரிமிதமான கூட்டம். எங்கள் நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்தது. கூட்ட நெரிசலில் கலந்து கொள்ள முடியாதவர்கள், மன்னிக்கவும். நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்,” என டுவீட் செய்துள்ளனர்.

ஆனால், ரசிகர்கள் பலரும் தங்களது தொகையைத் திருப்பித் தருமாறு கமெண்ட் செய்து வருகின்றனர். இது குறித்து ஏஆர் ரஹ்மான் நியாயமான பதிலைத் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதே சமயம், நிகழ்ச்சி குளறுபடி பற்றி எந்த ஒரு பதிலையும் ரஹ்மான் தரவில்லை. மாறாக, ஒரு ரசிகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றியும், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, வெளியில் வரத்தான் நேரமாகியது, என பதிவிட்டதை மட்டும் ரஹ்மான் ரீபோஸ்ட் செய்துள்ளார். அந்த டுவீட்டிலும் ரசிகர்கள் பலத்த கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, இவை அனைத்திற்கும் பதில் சொல்ல முடியாத சூழலில் ஏஆர் ரஹ்மான் அவரது டுவிட்டர் கணக்கை, “டுவீட்ஸ் பை அட்மினிஸ்ட்ரேட்டர்” என மாற்றிவிட்டார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.