![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/NTLRG_20230911132601910396.jpg)
காதலிக்காக ஜவான் இலவச டிக்கெட் கேட்ட ரசிகருக்கு ஷாருக்கான் பதில்
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. முதல் நாளன்றே 100 கோடிக்கு மேல் வசூலித்து தற்போது தனது சாதனை பயணத்தை தொடர்ந்து வருகிறது. ஜவான் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் ஷாரூக்கான் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் ஒரு உரையாடலின்போது ரசிகர் ஒருவர், தனது கேர்ள் பிரண்டுடன் சென்று ஜவான் படத்தை பார்க்க விரும்புவதாகவும், எனக்கு இலவச டிக்கெட் தருவீர்களா என்றும் ஷாரூக்கானிடம் கேட்டார். எப்போதுமே நகைச்சுவையாக பதில் அளிக்க கூடிய ஷாரூக்கான் “ரொமான்ஸ் விஷயத்தில் எப்போதுமே கஞ்சத்தனம் பார்க்கக் கூடாது பிரதர். தியேட்டருக்கு சென்று டிக்கெட் எடுத்து கேர்ள் பிரண்டுடன் ஜாலியாக படம் பாருங்கள்” என்று பதிலளித்துள்ளார்.