ஜி20 உச்சி மாநாடு கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது.
இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகள். ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்தியாவின் தாரக மந்திரம் அனைத்து பிரதிநிதிகளிடமும் வலுவாக எதிரொலித்தது” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “ஜி20 உச்சி மாநாட்டை நடத்த கிடைத்த வாய்ப்பை கவுரவமாக கருதுகிறோம். எங்கள் முயற்சி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தின் கூட்டு உணர்வுக்கு சான்றாக விளங்குகிறது” என பதிவிட்டுள்ளார்.