வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரபாட்: மொரோக்கோவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 3ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 2500 பேர் காயமுற்றனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்ய உலக நாடுகளின் உதவியை அந்நாடு அரசு கேட்டுள்ளது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Tamil_News_large_3429875.jpg)
வட ஆப்ரிக்க நாடான மொரோக்கோவில், கடந்த 8ம் தேதி இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சுற்றுலா தலமான மாரகேஷ் பகுதியில் இருந்து, 72 கி.மீ., தொலைவில், 18.5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவானது.
இதன் தொடர்ச்சியாக ஒரு சில இடங்களில் அடுத்தடுத்து சிறிய அளவிலான நில நடுக்கங்கள் உணரப்பட்டன. 100 ஆண்டுகளில் நடந்த நிலநடுக்கத்தால், பலியானோர் எண்ணிக்கை 3ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 2500 பேர் காயமுற்றனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்ய உலக நாடுகளின் உதவியை அந்நாடு அரசு கேட்டுள்ளது.
உதவும் உலக நாடுகள்
இதுவரை ஸ்பெயின், கத்தார், பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நான்கு நாடுகளின் உதவிகளை மொராக்கோ அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று பிரதமர் மோடி கடினமான நெருக்கடியில் சிக்கி உள்ள மொரோக்கா நாட்டிற்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்ய தயாராக உள்ளது என தெரிவித்து இருந்தார்.
அதேபோல், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் மொராக்கோ மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளோம் என விருப்பம் தெரிவித்து உள்ளனர். பல நாடுகளும் சர்வதேச உதவிக் குழுக்களும் உதவ முன் வந்துள்ளன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்தும், மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த மக்களும் அதிக அளவில் வசிக்கின்றனர்.
இழந்து தவிக்கிறேன்!
பாதித்த பகுதியை சேர்ந்த ஓமர் கூறியதாவது:”எனக்கு சொந்தமான அனைத்தையும் இழந்து நிற்கிறேன். மகனை இழந்தேன். வீட்டை இழந்தேன். நிற்கதியாக இருக்கும் எனக்கும், நாட்டு மக்களுக்கும் யாராவது உதவி செய்வார்களா என ஏங்கி நிற்கிறோம். எந்த உதவி கொடுத்தாலும் ஏற்று கொள்வோம்” என்றார் கண்ணீருடன்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement