புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்துள்ளார். மாநாடு நிறைவுற்ற நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை சரிபார்க்கும் வேலைகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் கனடா பிரதமரை அழைத்து செல்ல மாற்று விமானம் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானம் இன்று இரவு 10 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :