சென்னை: நடிகர் அஜித்தின் 62வது படமாக விடாமுயற்சி உருவாகவுள்ளது. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவிருந்த நிலையில், தற்போது இந்த மாதத்தின் இறுதியில் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபுதாபியில் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694484611_hm-1694443042.jpg)