![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694640193_NTLRG_20230913180501905107.jpg)
சலார் ரிலீஸ் தள்ளி வைப்பு
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‛சலார்'. ‛கேஜிஎப்' போன்றே அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி வருகிறது. கொரோனா உள்ளிட்ட பாதிப்பால் சுமார் 3 ஆண்டுகளாக தயாராகி வரும் இந்தபடம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. வரும் செப்., 28ல் படம் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்தனர். ஆனால் பட பணிகள் முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பட ரிலீஸ் தள்ளிப் போவதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படக்குழு வெளியிட்ட செய்தியில், ‛‛எதிர்பாராத சூழலால் சொன்ன தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. விரைவில் புதிய வெளியீட்டு தேதி பின்னர் அறிவிப்பு வெளியாகும்'' என தெரிவித்துள்ளனர்.