நடுவர் மற்றும் சமரச சட்ட வழக்கு ஒத்திவைப்பு| Adjournment of Arbitration and Conciliation Lawsuits

புதுடில்லி, ஒரு தீர்ப்பாயத்தின் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர், அந்தப் பதவிக்கு மற்றொருவரை பரிந்துரைப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், 1966ல் நடைமுறைக்கு வந்த நடுவர் மற்றும் சமரச சட்டப் பிரிவுகள் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அந்த நிபுணர் குழு ஆய்வுகளை செய்து வருவதாகவும், வரும் நவம்பரில் அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை, நவ., மாதத்துக்கு ஒத்தி வைத்து அமர்வு உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.