ஹாங்காங், ஹாங்காங்கிற்கு சுற்றுலா வந்த, தென் கொரிய பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டி தொல்லை கொடுத்த இந்தியரை போலீசார் கைது செய்தனர்.
தென் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்குக்கு சுற்றுலா வந்தார். இவர், சுற்றுலா தலங்கள் குறித்து, ‘வீடியோ’க்களை பதிவிடும் தொழிலில் ஈடுபட்டுஉள்ளார்.
அவர், ஹாங்காங்கில் மையப்பகுதியில் உள்ள, ‘டிராம்’ நிறுத்தத்தில் அமர்ந்து, தன் பயணம் குறித்த, ‘வீடியோ’வை நேரலையில் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை நெருங்கிய இந்திய இளைஞர், அவருடன் சகஜமாக பேச்சு கொடுத்தார்.
அந்த பெண்ணும் இயல்பாக பேசினார். அப்போது, ‘நான் தனியாக உள்ளேன், என்னுடன் வருகிறாயா’ என, அந்த இளைஞர் கேட்டார். அழைப்பை ஏற்க மறுத்த அந்த பெண், அங்கிருந்து எழுந்து நடக்க துவங்கினார்.
விடாமல் பின் தொடர்ந்து வந்த இளைஞர், அந்த பெண்ணை மறித்து மார்பில் கைவைத்து, பலவந்தமாக முத்தமிட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளன. இதையடுத்து, அந்த இந்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement