கொழும்பு, இலங்கையில் ரயில் ஓட்டுனர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதை ஒடுக்கும் நோக்கில் ராணுவத்தை இலங்கை அரசு களமிறக்கி உள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், ரயில்வே ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.
இதனால், 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த போராட்டம் நேற்று தீவிரமடைந்தது.
இதனால், இயக்கப்பட்ட சில ரயில்களிலும் கூரைகளின் மீதும், தொங்கியபடியும் ஏராளமானோர் பயணித்தனர்.
இவ்வாறு ரயில் கூரையின் பயணம் செய்தபோது, மேம்பாலத்தின் மீது மோதி பயணி ஒருவர் உயிரிழந்தார். இதேபோல், ரயிலில் தொங்கியபடி சென்ற பயணி ஒருவரும் தவறி கீழே விழுந்து பலியானார்.
ரயில் ஓட்டுனர்களின் போராட்டத்திற்கு அந்நாட்டு போக்கு வரத்து துறை அமைச்சர் பண்டுலா குணவர்தனே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஓட்டுனர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், இலங்கை அரசு ராணுவத்தை களமிறக்கி உள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரீகேடியர் ரவி ஹெராத் கூறுகையில், ”பொது மக்களுக்கும், ரயில் பயணியர் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேபோல், போராட்டத்தின் போது அரசாங்க சொத்துக்களை காக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்றார்.
நம் அண்டை நாடான இலங்கையில், போராட்டம் காரணமாக ரயில்கள் குறைவாக இயக்கப்பட்டன. அதில், ஆபத்தான முறையில் ரயில் கூரைகளின் மீதும், படியில் தொங்கியபடியும் மக்கள் பயணித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement