2023 ஆசிய கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சுப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போட்டியில் இந்திய அணி 41 ஓட்டங்கள்; வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய இந்திய அணி; 50 ஓவர்களில் 213 ஓட்டங்களை எடுத்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 53 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 39 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், சரித் அசலங்க 4 விக்கெட்டுக்களையும், மஹிஷ் தீக்ஷன ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பதில் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 42 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சிறந்து விளங்கிய துனித் வெல்லாலகே போட்டியின் நாயகனாக தெரிவானார்.