வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கல்வி நிலையங்களில் சேரவும், டிரைவிங் லைசென்ஸ் பெறவும், வாக்காளர் பட்டியல், ஆதார் எண் பதிவு, திருமணம் பதிவு, அரசு பணிகளில் சேரவும் ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும். இதற்கான நடைமுறை வரும் அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.
சமீபத்தில் முடிந்த பார்லி கூட்டத்தொடரில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்தச்சட்டம்(2023) நிறைவேறியது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை தேசிய – மாநில அளவில் தகவல் தளத்தை உருவாக்கும் வகையில், இந்த சட்டம் அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.
இதன் மூலம், பொதுச் சேவைகள், சமூக நலன்கள் மற்றும் டிஜிட்டல் பதிவு ஆகியவற்றை, வெளிப்படையாகவும், திறமையாகவும் அமல்படுத்துவதை உறுதி செய்யும் எனக்கூறியுள்ளது. இதன் மூலம் ஒருவரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்க பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.
இந்த சட்டம் அமலுக்கு வரும் அக்.,1ம் தேதி முதல் மக்கள் தொகை பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு, அரசுப்பணி நியமனம் ஆகியவற்றிற்கு ஒரே அரசு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement