நடிகரான மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் ‘மார்கழி திங்கள்’.
இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். புது முகங்கள் நடித்துள்ள இப்படத்தில் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, “இந்த 60 ஆண்டுகளில் எத்தனையோ மேடை ஏறி இருக்கிறேன். சுலபமாகப் பேசியிருக்கிறேன். ஆனால் இந்த மேடையில் பேச கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. என் மகன் மனோஜ் டைரக்டர் ஆகதான் விருப்பப்பட்டான்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_14_at_1_57_09_PM.jpeg)
அதற்குப் பெரிய போராட்டம் இருக்கும். நடிப்பதற்குக் கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று சொல்லி அவனை நடிக்கச் சொன்னேன். அதனால் எனக்கும் அவனுக்கும் கடுமையான சண்டை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்திற்காக சூட்டிங் ஸ்பாட் போன பிறகுதான் என் பையன் மேல் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. நானே 200 ஆர்ட்டிஸ்ட்டுகளை உருவாக்கியவன். என்னை அப்படி பண்ணாதே, இப்படி பண்ணு! என்று வழிநடத்தும் போது இவனுக்கு என்ற ஒரு தனிப்பட்ட கற்பனை இருப்பது எனக்குப் புரிந்தது.
அடுத்து இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் இளையராஜா என் பிள்ளையை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று சொன்னேன். நீ போயா நான் பாத்துக்குறேன் என்று நம்பிக்கை கொடுத்தான். ஒரே ஒரு நாள் பேக்ரவுண்ட் மியூசிக் எப்படி பண்ணிருக்கான் என்று பார்க்க போயிருந்தேன். பின்னி எடுத்துட்டான். தமிழ்நாட்டின் மிகப்பெரிய சொத்து இளையராஜா.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_14_at_1_16_08_PM.jpeg)
ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ‘ரக்ஷனா ’ என்று இந்த படத்தில் ஹீரோயினுக்கு பேர் வைத்திருக்கிறேன். மிகப்பெரிய ஜாம்பவான்கள் நிறைய பேர் இன்று விழாவிற்கு வந்திருக்கிறார்கள். இத்தனை பேரின் ஆசிர்வாதம் பெற்ற மனோஜ் ரொம்ப லக்கி. சும்மா இப்பவே பெருமை பேசக்கூடாது. இந்த படம் வெற்றி அடையும் போது என் பையனை பற்றி நான் பேசுவேன்” என்றார்.