வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உத்தரகண்ட் மாநில மதரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் படிப்பு கட்டாயமாக்கப்படும் என மாநில வக்புவாரிய தலைவர் அறிவித்துள்ளார்.
மாநில வக்பு வாரியதலைவர் ஷதாப் ஷம்ஸ் தெரிவித்து உள்ளதாவது: நாம் நமது காலச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை மதிக்க கற்றுத்தர வேண்டும். இதற்காக மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில் அரபு மற்றும் சமஸ்கிருதம் மொழிகள் கட்டாயமக்கப்படும். இதற்காக சமஸ்கிருத ஆசிரியர்களை வக்பு வாரியம் நியமனம் செய்யும்.
மதரஸாக்களை நவீனப்படுத்தும் விதமாக 117 மதரஸாக்களில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாட திட்டம் செயல்படுத்தப்படும். அறிவியல் கற்றல் மற்றும் இஸ்லாமிய ஆய்வுகளின் கலவையாக இப்பாடத்திட்டம் இருக்கும் . இதன்மூலம் மாணவர்கள் அரபு மொழியுடன் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொள்ள முடியும்.
மாநில வக்பு வாரியத்தின் கீழ் உள்ள 117 மதரஸாக்களில் டேராடூன், ஹரித்துவார், உதம்மிங்நகர், மற்றும் நைனிடால் ஆகிய நான்கு இடங்களில் மாதிரி மதரஸாக்கள் அமைக்கப்படும்.
மாதிரி மதரஸாக்களில் காலை 6.30 மணி முதல் தொழுகைக்கு பின் குரான் படிப்பதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். பின்னர் காலை 8 மணி முதல் மதியம் 2மணி வரையில் சாதாரண பள்ளிகளை போல் இயங்கும். ஆங்கில வழி பள்ளிகளை போல் சீருடையும் கட்டாயமாக்கப்படும். இவை வெற்றி பெரும்பட்சத்தில் தொடர்ந்து இது போன்ற கல்வி திட்டத்தை மற்ற மதரஸாக்களிலும் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement