கடல்சார் பேரழிவுகளுக்கு பதிலளிப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துவது பற்றிய கலந்துரையாடல்

கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் தேடல் மற்றும் மீட்பு பணி மற்றும் கடலில் ஏற்படும் எந்தவொரு அவசரநிலைக்கும் பதிலளிக்கும் திறன் தொடர்பாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் கடற்படையின் துணைத் தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் 2023 செப்டம்பர் 06 ஆம் திகதி சிறப்பு கலந்துரையாடலொன்று கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் கடல்சார் பேரழிவுகளுக்கான பதிலளிப்பு பொறிமுறை மற்றும் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் யூனியன் சிவில் பாதுகாப்பு பொறிமுறை (Union Civil Protection Mechanism – UCPM) இணைந்து 2023 செப்டம்பர் 04 முதல் 15 வரை பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது. அதன் படி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விசேட கலந்துரையாடலில் கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று பங்கேற்றதுடன், கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தையும் இந்த தூதுக்குழுவினர் பார்வையிட்டனர்.

மேலும், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் தேடுதல் மற்றும் மீட்பு திறன்கள் மற்றும் கடலில் எரிபொருள் கசிவு ஏற்பட்டால் பதிலளிக்கும் திறன் குறித்து கடற்படை நடவடிக்கைகளின் பணிப்பாளர் கொமடோர் அருண வீரசிங்க தூதுக்குழுவினருக்கு தெரியப்படுத்தினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.