ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை இராணுவ பொறியியல் படையணியின் பிரிகேடியர் எம்.பி.கே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 8) கடமைகளை பொறுப்பேற்றார். அங்கு வந்தடைந்த அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதிய பணிப்பாளர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டதுடன் பல சிரேஸ்ட பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் முன்னிலையில் தனது புதிய கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
பிரிகேடியர் எமபீகே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் நிலையத் தளபதியாக பணியாற்றினார். பிரிகேடியர் எஸ்.பி.ஜி கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ தற்போது இலங்கை பொறியியல் படையணியின் நிலையத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.