ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில், இரு ராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு போலீசார் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து ராணுவ வீரர்கள் போலீசாருடன் இணைந்து நேற்று முன்தினம் இரவு முதல், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ராணுவ கர்னல் மன்பிரித் சிங் மற்றும் மேஜர் ஆஷிஷ் டொன்சாக் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஹிமான்யூன் முசாமில் பாட்டும் வீர மரணம் அடைந்தார். ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர்கள் இந்த பகுதியில் கண்காணிப்பு மற்றும் உடல் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த தாக்குதலில் மூன்று ராணுவ அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர். கடும் துப்பாக்கி சண்டையால் அவர்களை உடனடியாக மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பட்ராடா வனப்பகுதியில் செப்., 11ம் தேதி முதல் நடைபெறும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். பாதுகாப்புபடை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement