வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில், பஹமதி ஆற்றில் 34 மாணவர்களுடன் சென்ற படகு மூழ்கியது. அதில் 18 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பீஹாரின் முசாபார் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி மாணவர்கள் 34 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற பஹமதி ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென ஆற்றில் மூழ்கியது. 16 பேர் மீட்கப்பட்ட நிலையில் 18 பேரை காணவில்லை. தகவல் அறிந்த மாநில மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் சம்பவ இடத்தில் கூடி உள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், உயர் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படும் என்றனர். படகு விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement