மரங்கள் வளரும் போதும் சரி, மடிந்து சாய்ந்தாலும் மனிதர்களுக்கு எல்லாவகையிலும் பயனைத் தருகிறது. சூழலுக்கு, உணவுக்கு, வருமானத்துக்கு என ஒவ்வொரு கட்டத்திலும் மரங்கள் தொடர்ந்து நல்ல பலன்களைத் தருகிறது. வணிக ரீதியாக பார்த்தால் மரங்கள் தரும் லாபம் என்பது மிக அதிகம்.
விவசாயிகள் உணவு தானியங்களை உற்பத்தி செய்வதுடன் நின்றுவிடாமல், அத்துடன் சேர்த்து மர வளர்ப்பிலும் ஈடுபட்டால் அதிக லாபம் நிச்சயம் உண்டு. விவசாயம் செய்யத் தெரியாதவர்கள் கூட ஆர்வம் இருந்தால் தங்கள் நிலங்களில் மரங்களை வளர்த்து நல்ல வருமானத்தை பெறலாம். அதற்காக வழிகாட்டுகிறது பசுமை விகடன் ஒரு நாள் பயிற்சி முகாம். இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தை லாபம் கொழிக்கும் தொழிலாக செய்ய பசுமை விகடன் பல வழிகளிலும் விவசாயிகளுடன் பயணித்து வருகிறது.
அந்த வகையில் தற்போதைய தேவை எதிர்கால தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பசுமை விகடன் மாமல்லபுரம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து `மரப்பயிரும் பணப்பயிரே!’ என்ற ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
மாமல்லபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn PHF B. மகேஷ் குமார் தலைமையில், மாவட்ட ஆளுநர் Rtn P.பரணிதரன் முன்னிலையில்,
முன்னாள் மாவட்ட ஆளுநர் Rtn.pdg A. சம்பத்குமார் சிறப்புரையுடன் இந்த விழா சிறப்பாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் ரோட்டரி மாவட்டம் 3231-ன் மிகச் சிறந்த ரோட்டரி ஆளுமைகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
“தனியார், அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான, சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்களைக் கண்டறிந்து, அந்நிலங்களை மேம்படுத்திக் கூழ்மர சாகுபடி செய்ய ஊக்குவித்து வருவாதக” கூறும், TNPL வனத்தோட்ட துறை உதவி பொது மேலாளர் ரவி இந்தக் கருத்தரங்கில் விரிவாக உரையாற்ற உள்ளார்.
மேலும் பெரு, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் தரிசு நிலங்களிலிருந்து நிலையான வருவாய் பெறும் வகையில், TNPL வனத்தோட்ட துறை செயல்படுத்தி வரும் இரண்டு வகையான வனத்தோட்ட திட்டங்களை பற்றியும் இந்த கருத்தரங்கில் பேச உள்ளார்.
“தமிழ்நாட்டில் பாலூர்-1, பாலூர்-2, பேச்சிப்பாறை-1, கல்லார்-1, சிங்கப்பூர் பலா, ஒட்டு பலா ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பலா மரங்கள் எங்கு நன்றாக வளர்ந்துள்ளனவோ, அந்த இடத்தில் மண்வளம் சிறப்பாக உள்ளது என்று அர்த்தம். எனவே, வடிகால் வசதியுள்ள நிலங்களில் பலா நன்றாக வளரும். 25 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 75 மரங்கள் சாகுபடி செய்யலாம். கொஞ்சம் நெருக்கி நடவு செய்தால், 100 மரங்களைக்கூடச் சாகுபடி செய்ய முடியும். ஒரு ஏக்கரில் பலாச் சாகுபடி செய்திருந்தால், பத்து ஆண்டுகள் கொண்ட மரங்களிலிருந்து குத்தகை மூலம் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஒரு மரத்திலிருந்து 1,000 ரூபாய் மதிப்புள்ள பலா கிடைக்கும். இதையே நேரடியாக நாம் விற்பனை செய்தால், குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
பலா மரங்கள் பல தலைமுறைக்கு வருமானம் கொடுத்துக் கொண்டே இருக்கும், பலா மரங்களைச் சாகுபடி செய்தால் அந்த விவசாயிகளின் அடுத்ததடுத்த தலைமுறைக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்” என்கிறார் கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த வேளாண் துறையில் ஓய்வுபெற்ற உதவி இயக்குநரும் முன்னோடி விவசாயியுமான பி.ஹரிதாஸ்.
அவருடைய அனுபவத்தின் மூலமாக பலா மரங்கள் எப்படியெல்லாம் லாபம் தரும், என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த கருத்தரங்கில் விளக்கி பேச உள்ளார்.
“இன்று பூச்சிக்கொல்லி வாங்கித் தெளித்து பூச்சிகளுடன் சேர்த்து நம்மையும் அழித்துக்கொண்டிருக்கிறோம். பசுமைப் புரட்சி என்று சொல்லி நம் விவசாயிகளிடம் ரசாயன உரத்தைக் கொடுத்தார்கள். அது உரமல்ல, விஷம். மண்ணுக்கு வளத்தைக் கொடுப்பதுதான் உரம் என்பார்கள். புயல் வந்தால்தான் மழை வரும் என்று நினைக்கிறோம்.
இந்தத் தேதியில் மழை என்று சொன்னால், அன்று மழை பெய்யும். ஆனால் இன்று பருவநிலை மாற்றத்தால் பருவமழை தவறிப் பெய்கிறது. அதற்கேற்றாற்போல் விவசாயிகள் பருவமாற்றத்தை உணர்ந்து விவசாயம் செய்ய வேண்டும்” என்கிறார் செங்கபட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி அரியனூர் ஜெயச்சந்திரன். இவர் விவசாயம் மரம் வளர்ப்பு குறித்து பல முக்கிய அம்சங்களை கருத்தரங்கில் எடுத்துரைக்க உள்ளார்.
மர சாகுபடி செய்து நல்ல லாபம் பெற்று வரும் விவசாயிகள் பலர் தங்களுடைய அனுபவங்களை எடுத்துகூறி வழிகாட்ட வருகின்றனர்.
எனவே விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் அனைவரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற பசுமைவிகடன் மற்றும் மாமல்லபுரம் ரோட்டரி சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் நாள், இடம்
நாள்: 16.9.23, சனிக்கிழமை.
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம்: பகவான் பண்ணை, நடுவக்கரை கிராமம் பட்டரைக்கழனி அஞ்சல், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்.
(திருக்கழுக்குன்றத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் பண்ணை உள்ளது. பேருந்து, ஷேர் ஆட்டோ வசதிகள் உண்டு.)
இப்போதே முன்பதிவு செய்யுங்கள்…
உங்கள் பெயர், முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு…
பசுமை விகடன், செல்போன்: 99400 22128.
Rtn PHF B. மகேஷ் குமார், செல்போன்: 94426 14278.