கடந்த கால யுத்தம் காரணமாக ,டம்பெயர்ந்து மீண்டும் குடியேறியுள்ள கிளிநொச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சுமார் 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியினால் குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன.
,வற்றில் முதல் கட்டமாக நேற்று (13) ஐந்து சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், கோரக்கன் கட்டு கிராமத்திலும் ,ரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.