வாட்சப் சேனல்கள் இந்தியாவில் அறிமுகம்! இதனை எப்படி பயன்படுத்துவது?

இந்தியா மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை வாட்சப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனல் அம்சத்தைப் போலவே, மெட்டாவின் வாட்ஸ்அப் இப்போது பயனர்கள் சேனல்கள் மூலம் தங்கள் பாலோவர்ஸ்களுடன் பேச உதவுகிறது, இது ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் செய்திகளை பரிமாறி கொள்ள உதவுகிறது.  வாட்ஸ்அப் சேனல்கள் வழக்கமான சாட்களில் இருந்து தனிப்பட்ட முறையில் இயங்குகின்றன, பின்தொடர்பவர்களின் அடையாளங்கள் மற்ற பின்தொடர்பவர்களுக்கு ரகசியமாக இருப்பதை உறுதிசெய்கிறது. இந்த சேனல்கள் ஒரு திசை ஒளிபரப்பு கருவியாக செயல்படுகின்றன. சேனல்களை நிர்வகிப்பவர்கள், தங்களை பின்தொடர்பவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வரையில் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் பகிர முடியும்.

“நாங்கள் இந்தியாவிலும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் சேனல்களைத் தொடங்குகிறோம் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாட்ஸ்அப் சேனல்கள் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும், மேலும் உங்களுக்கு முக்கியமான நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வாட்ஸ்அப்பிற்குள் தகவல்களை பெற தனிப்பட்ட வழியை வழங்குகிறது” என்று வாட்ஸ்அப் குறிப்பிடுகிறது.

WhatsApp அதன் புதிய சேனல்கள் அம்சத்தை “அப்டேட்ஸ்” என்ற பிரத்யேக டேபில் அறிமுகப்படுத்துகிறது. இங்கே, பயனர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் பிற உரையாடல்களிலிருந்து தனித்தனியாக வைத்திருக்கும் ஸ்டேட்டஸ் மற்றும் அவர்கள் பின்பற்றத் தேர்வுசெய்த சேனல்களை அணுக முடியும். கூடுதலாக, பயனர்கள் மின்னஞ்சல்கள் அல்லது ஆன்லைனில் தேடல் இணைப்புகள் மூலம் சேனல்களை அணுகலாம்.  இந்த அம்சம் உலகளவில் விரிவுபடுத்தப்படுவதால், செயல்பாடு மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சேனல்களுக்கு புதிய அப்டேட்களையும் அறிமுகப்படுத்துகிறது என்று வாட்சப் மேலும் குறிப்பிடுகிறது.

எப்படி சேனல்களை கண்டறிவது? 

நாடு வாரியாக வடிவமைக்கப்பட்டுள்ள பில்டர்கள் மூலம் பயனர்கள் இப்போது சேனல்களைக் கண்டறியலாம். பயனர்கள் தங்கள் செயல்பாட்டு நிலை, பிரபலம் அல்லது புதியதன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சேனல்களை கண்டறியலாம். இன்ஸ்டாகிராம் ஒளிபரப்பு சேனல்களில் பயனர்கள் எவ்வாறு செயல்படலாம் என்பது போலவே, வாட்ஸ்அப் சேனல்களிலும், பயனர்கள் ஈமோஜியைப் பயன்படுத்தி கருத்துக்களை தெரிவிக்கலாம். ஒரு கருத்துக்கும் எவ்வளவு ரியாக்ஸன் வந்துள்ளது என்பதன் மொத்த எண்ணிக்கை காட்டப்படும், ஆனால் சேனல்களை நிர்வகிப்பவர்களுக்கு கூடுதல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாட்ஸ்அப்பின் சர்வர்களில் இருந்து தானாக நீக்கப்படுவதற்கு முன், நிர்வாகிகள் 30 நாட்கள் வரை தங்கள் அப்டேட்களை எடிட் செய்யும் திறனை விரைவில் பெறுவார்கள். இதற்கிடையில், வாட்சப் சேனல்களில் செய்திகள் குவிவதைத் தடுக்க, WhatsApp அதன் சர்வர்களில் சேனல் ஹிஸ்டரியை அதிகபட்சமாக 30 நாட்களுக்கு வைத்திருக்கும். பின்தொடர்பவர்களின் போன்களில் புதுப்பிப்புகள் இன்னும் விரைவாக அழிந்துவிடும் அம்சங்களை செயல்படுத்தவும் வாட்சப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கூடுதலாக, நிர்வாகிகள் தங்கள் சேனல்களுக்குள் ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் ஃபார்வர்டுகளை எடுப்பதைத் தடுக்கும் விருப்பத்தைப் பெறுவார்கள்.

கூடுதலாக, வாட்ஸ்அப் நிர்வாகிகளுக்கு அவர்களின் சேனலை யார் பின்தொடரலாம் மற்றும் அவர்களின் சேனலை கோப்பகத்தில் கண்டறிய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா என்ற கட்டுப்பாட்டையும் வழங்குகிறது. முன்னிருப்பாக, சேனல்கள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், சேனல்களின் முதன்மையான குறிக்கோள் அதிக  பார்வையாளர்களைச் சென்றடைவதுதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.