வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாட்ரிட்: ஸ்பெயின் சென்றுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கு அதிகாலை ஜாக்கிங் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்குவங்க திரிணாமுல் காங்., கட்சி முதல்வர் மம்தா பானர்ஜி ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 12நாள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். இன்று தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தலைநகர் மாட்ரிட்டில், தன்னுடன் வெளிநாடு வந்திருந்த அதிகாரிகளுடன், அதிகாலையில் ஜாக்கி செல்லும் வீடியோ தான் அது. அப்போதும் தான் அணியும் வெள்ளை நிற பருத்திச் சேலை, சாதாரண ஹவாய் செருப்பும் அணிந்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement