மும்பை, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கனமழை பெய்த நிலையில், அங்கு தரையிறங்கிய சிறிய ரக விமானம், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, அதில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு வி.எஸ்.ஆர்., வென்சர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம், எட்டு பேருடன் நேற்று சென்றது.
இந்த விமானம், நேற்று மாலை மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்க முயன்றது. அப்போது, கனமழை பெய்ததால், தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று, தரையில் மோதி நொறுங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். பின், விமானத்தின் உள்ளே சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே, மோசமான வானிலை மற்றும் இந்த விபத்தின் எதிரொலியாக இதர விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement