![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694773692_NTLRG_20230915104322464272.jpg)
லியோவிலும் போலீஸ் அதிகாரியாகவே தொடரும் கவுதம் மேனன்
இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்கும் படங்களில் எல்லாம் ஒரு சில காட்சிகளிலாவது தலைகாட்டி விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அந்த அளவிற்கு அவருக்குள் ஒரு நடிகனும் ஒளிந்து இருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக முக்கியமான படங்களில் கவுதம் மேனனுக்கு என ஒரு கதாபாத்திரம் ஒதுக்கப்படும் அளவிற்கு பிசியான நடிகராக மாறிவிட்டார். அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கவுதம் மேனன்.
இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. இவருடன் இணைந்து நடித்த பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபு ஆண்டனி வெளியிட்ட புகைப்படம் ஒன்றின் மூலமாக இந்த தகவல் உறுதியாகி உள்ளது. இதற்கு முன்னதாக காக்க காக்க படத்தில் துவங்கி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், விடுதலை உள்ளிட்ட படங்களிலும் கவுதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.