சிட்ரோன் நிறுவனத்தின் புதிய C3 ஏர்கிராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அறிமுக சலுகையாக ரூ.9.99 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று செப்டம்பர் 15ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
சி3 ஏர்கிராஸ் காரின் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படும் நிலையில் டெலிவரி அக்டோபர் 2023 முதல் வழங்கப்பட உள்ளது.
Citroen C3 Aircross SUV
5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மைலேஜ் 18.5 Kmpl என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.
சி3 ஏர்கிராஸ் காரின் இன்டிரியரில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, மேனுவல் ஏசி கண்ட்ரோல், இரண்டாவது வரிசை கூரையில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்கள் மற்றும் ஐந்து ஃபாஸ்ட்-சார்ஜர் போர்ட் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே பெற்றிருக்கும்.
சி பிரிவில் உள்ள போட்டியாளர்களான ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.
C3 Aircross எஸ்யூவி விலை ரூ.9.99 லட்சத்தில் You வேரியண்ட் 5 இருக்கை மட்டும் துவங்கும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், முழுமையான விலை பட்டியல் வெளியிடப்படவில்லை. Plus (5 Seater), Plus (5+2 Seater), Max (5 Seater) மற்றும் Max (5+2 Seater ) என மொத்தமாக 5 வேரியண்ட் உள்ளது.