கோவை உக்கடம் பகுதியில் கடந்தாண்டு கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையொட்டி தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் ஜமேஷா முபினுடன் படித்த சந்தேகத்துக்குரிய 22 நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கோவை திமுக பிரமுகர் தமிமுன் அன்சாரி, கோவை மாநகராட்சி 82வது வார்டு திமுக கவுன்சிலர் முபசீரா, ஜி எம் நகரில் உள்ள அபுதாஹிர், குனியமுத்தூர் பகுதியில் உள்ள சோஹைல், கரும்புக்கடை பகுதியில் உள்ள மன்சூர் உள்ளிட்டவர்கள் வீடுகளில் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து திமுக கவுன்சிலர் முபசீரா கணவர் ஆரிஃப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சனோஃபர் அலியின் காய்கறி கடை அருகே என் கடை உள்ளது. அதனடிப்படையில் என்னிடமும் விசாரணை செய்தனர். ‘அரபிக் கல்லூரிக்கு சென்றீர்களா?’ என விசாரித்தனர். நான் சென்றது இல்லை என கூறினேன்.1.5 ஆண்டுகளாக தான் சனோஃபர் அலியை தெரியும். பக்கத்து கடை என்ற அடிப்படையில் விசாரித்து விட்டு கிளம்பினர்.
ஒரு சில இடங்களுக்கு சென்று வந்துள்ளீர்களா என கேட்டனர். 5 அதிகாரிகள் வந்திருந்தனர். என்ன என்ன வியாபாரம் செய்தனர் என கேட்டனர். சனோபர் எப்படி தெரியும் என மட்டும் கேட்டனர். முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தேன். எனக்கும் அரபிக் கல்லூரிக்கும் சம்பந்தம் இல்லை. என் மனைவியிடம் எந்த விசாரணை நடத்தவில்லை.” என்றார்.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரபு மொழி பயிற்சி வகுப்புகள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்கள் சேர்க்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வகுப்புகள் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் மூலம் வேகமாக பரவியுள்ளது. இதில் ஈர்க்கப்பட்டவர்களை பயன்படுத்தி கோவை கார் குண்டு வெடிப்பு சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
31 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.60 லட்சம் ரொக்கம், 18,200 அமெரிக்க டாலர், செல்போன்கள், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், அரபு மொழியில் உள்ள புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்று கூறியுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY