![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694827212_NTLRG_20230915135105247255.jpg)
டெவில் படத்தில் என்ன நடக்கிறது – இயக்குனர் மாற்றமா?
நவின் மேடாராம் இயக்கத்தில் நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'டெவில் – பிரிடிஷ் சீக்ரெட் ஏஜென்ட்' . அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். இந்த படம் வருகின்ற நவம்பர் 24ம் தேதி அன்று வெளியாகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து 'மாய செய்சே' எனும் முதல் பாடல் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவித்தனர். இப்போது இந்த புதிய போஸ்டரின் மூலம் தான் சர்ச்சை தொடங்கியுள்ளது. இந்த போஸ்டரில் இயக்குனர் நவீன் மோடாராம் பெயருக்கு பதிலாக அபிஷேக் நமா எனும் தயாரிப்பாளரின் பெயர் இயக்குனர் என உள்ளதால் இப்போது தெலுங்கு திரையுலகில் புயல் ஒன்று கிளம்பியுள்ளது.