வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அந்நாட்டு அணு ஆயுதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12-ம் தேதி தனி ரயில் மூலம் பலத்த பாதுகாப்புடன் ரஷ்யா சென்றடைந்தார். இவரது பயணம் அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தார்.
ரஷ்யாவிடம் உள்ள அணு ஆயுதங்களை வாங்கும் நோக்குடன் தான் இவரது பயணம் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
இதையடுத்து ரஷ்யா தயாரித்துள்ள போர் விமானங்கள், அணு ஆயுதங்கள், அணு ஏவுகணைகள், ஆகியவற்றை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களி்ல் பரவியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement