வியாழன் கிரகத்தில் பிளாஷ்லைட்! அரிய நிகழ்வை உறுதி செய்த வானியலாளர்கள்

டோக்கியோ: வியாழன் கிரகத்தில் சக்திவாய்ந்த தாக்கங்கள் மிகவும் அரிதானவை என்றாலும், அவை அவ்வப்போது நிகழ்கின்றன
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) தி நியூயார்க் டைம்ஸின் (NYT) அறிக்கையின்படி, ஜப்பானில் உள்ள ஒரு அமெச்சூர் வானியலாளர் வியாழனின் வளிமண்டலத்தில் ஒரு பிரகாசமான ஃபிளாஷ் ஒன்றைப் பிடித்தார், இது விஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்தது.

அதை அடுத்து, விஞ்ஞானிகள் வியாழன் கோள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அடையாளம் தெரியாத வானியலாளர் ஒருவர், கியோட்டோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர் டாக்டர் கோ அரிமட்சு (Dr Ko Arimatsu, an astronomer at Kyoto University) அவர்களுக்கு, வியாழன் கிரகம் தொடர்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். மின்னஞ்சலைப் பெற்றவுடன், டாக்டர் அரிமட்சு மேலும் தகவல் தேவை என்று கேட்டுக் கொண்டார் என்று  தி நியூயார்க் டைம்ஸின் (NYT) அறிக்கை கூறுகிறது.

ஆகஸ்ட் 28ம் தேதியன்று, விஞ்ஞானி அரிமட்சு, வியாழன் கிரகம் தொடர்பான ஃபிளாஷ் பற்றிய மேலும் ஆறு தரவுகளைப் பெற்றார், இது வியாழன் கிரகத்தில் இதுவரை பதிவுசெய்யப்பட்டதில் மிகவும் பிரகாசமான ஒன்றாகும். வியாழனின் வளிமண்டலத்தை பாதிக்கும் சூரிய மண்டலத்தின் விளிம்புகளில் இருந்து வரும் சிறுகோள்கள் அல்லது வால்மீன்களால் இது போன்ற ஃப்ளாஷ்கள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேம்பட்ட தொலைநோக்கிகள் மூலம் கூட, இவற்றை நேரடியாகக் கண்காணிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று இது தொடர்பாக ஒரு மின்னஞ்சல் செய்தியில் வானியலாளர் அரிமட்சு கூறினார். வியாழனின் ஈர்ப்பு இந்த பொருள்களை ஈர்க்கிறது, அவை இறுதியில் கிரகத்தில் மோதுகின்றன, அவற்றை நேரடியாகப் படிக்க இது ஒரு தனித்துவமான மற்றும் விலைமதிப்பற்ற கருவியாக அமைகிறது என்று அவர் மேலும் கூறினார்.

முந்தைய தாக்கங்கள்
NYT அறிக்கையின்படி, வியாழனில் சக்திவாய்ந்த தாக்கங்கள் தற்போது மிகவும் அரிதானவை, ஆனால் அவை நிகழ்கின்றன. 1994 ஆம் ஆண்டில், ஒரு வால்மீன், வியாழன் கிரகத்தை மிகவும் சக்தியுடன் தாக்கியது, அது கண்களுக்கு புலப்படகூடிய குப்பைகளை விட்டுச் சென்றது. 2009 இல் மற்றொரு தாக்கம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2010 முதல் வியாழனில் காணப்படும் ஒன்பது ஃப்ளாஷ்களில் எட்டு அமெச்சூர் வானியலாளர்களால் தெரிவிக்கப்பட்டது என்று டாக்டர் அரிமட்சு கூறினார். சிறிய அளவிலான வானியல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். ஏனென்றால், சிறிய அளவில் செய்யப்படும் முயற்சிகளே, மிகப் பெரிய கண்டுபிடிப்புகளுக்கு வித்தாகிறது.

வானியலாளர்களின் ஆரம்ப பகுப்பாய்வுகளின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான ஃப்ளாஷ், சைபீரியாவில் 1908 துங்குஸ்கா வெடிப்புக்கு ஒப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது ஆகும், இது 800 சதுர மைல் காடுகளைத் தாக்கிய ஒரு சிறுகோள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெச்சூர் வானியல் என்பது ஒரு பொழுதுபோக்காகும் , இதில் பங்கேற்பாளர்கள் வானத்தில் உள்ள வானப் பொருட்களை வெற்று கண்கள், தொலைநோக்கிகளை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் பார்த்து மகிழ்வார்கள் . விஞ்ஞான ஆராய்ச்சி அவர்களின் முதன்மை இலக்காக இல்லாவிட்டாலும், சில அமெச்சூர் வானியலாளர்கள் (Amature Astronomer) குடிமக்கள் அறிவியலில் பங்களிப்பு செய்கிறார்கள்.

(ஏஜென்சிகளின் உள்ளீடுகளுடன்)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.