சிங்கப்பூர் : சிங்கப்பூரில் மாரியம்மன் கோவிலில் பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக, இந்திய வம்சாவளி வழக்கறிஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் வசிப்பவர் ரவி மாடசாமி, 54. இந்திய வம்சாவளி வழக்கறிஞரான இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி சிங்கப்பூர் டவுன்டவுன் தெற்கு பாலம் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்ற ரவி, அங்கிருந்த பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்தது.
இது தவிர, அங்கிருந்த மற்றொரு பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, ரவி மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ரவி, சிங்கப்பூரில் உள்ள மனநல மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது ஏற்கனவே இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போதுள்ள வழக்குகளிலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement