ஜியோ AirFiber சிறப்பு அம்சங்கள்: நாளை சந்தையில் அறிமுகம்!

சென்னை: நாளை இந்திய சந்தையில் ஜியோ நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

வீடு மற்றும் அலுவலகங்களில் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் ஜியோ ஏர்ஃபைபர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நொடிக்கு 1.5 ஜிகா பிட் வேகத்தில் இன்டர்நெட் இணைப்பை இதில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு தனித்துவ அனுபவத்தை வழங்கும் நோக்கில் இது அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.

சிறப்பு அம்சங்கள்

  • ட்ரூ 5ஜி இணைப்பில் ஜியோ ஏர்ஃபைபர் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதன் சேவை கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பிளக்-அண்ட்-பிளே மோடில் இதை எளிதில் நிறுவி பயனர்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பர்சனல் ஹாட்ஸ்பாட் போல ஜியோ ஏர்ஃபைபர் இயங்கும் என தெரிகிறது.
  • பாயிண்ட்-டு-பாயிண்ட் ரேடியோ லிங்க் மூலம் இது இயங்குகிறது. இதற்கு வயர்லெஸ் சிக்னல்கள் பயன்படுத்தப்படுகிறது.
  • நொடிக்கு 1.5 ஜிகா பிட் என்ற வேகத்தில் இன்டர்நெட் இணைப்பை பெற முடியும்.
  • பிராட்பேண்ட் இணைப்புடன் ஒப்பிடும் போது ஜியோ ஏர்ஃபைபரின் விலை கூடுதலாக இருக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ.6,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதோடு பேரன்டல் கன்ட்ரோல் டூல், Wi-Fi 6 சப்போர்ட், ஜியோ செட்-டாப் பாக்ஸுடன் ஒருங்கிணைப்பு போன்றவற்றை ஜியோ ஏர்ஃபைபர் உள்ளடக்கியுள்ளதாக தகவல்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.