
பாபி சிம்ஹா நடிக்கும் தடை உடை!
நடிகர் பாபி சிம்ஹா 'ஜிகர் தண்டா' படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரின் மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், கடந்த காலத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த எந்த படமும் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ராகேஷ்.என்.எஸ் இயக்கத்தில் பாபி சிம்ஹா தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு 'தடை உடை' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். மேலும், இதில் கதாநாயகியாக மிஷா நரங் நடிக்கின்றார். பிரபு, செந்தில், ரோஹிணி, சந்தான பாரதி, சரத் ரவி, தீபக் பரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.