தந்தை பெரியாரின் பிறந்ததினம் இன்று!
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_17_at_08_23_29.jpeg)
தந்தை பெரியாரின் 145-வது பிறந்ததினம் இன்று.
வேலூர், அண்ணா சாலையிலுள்ள, பெரியார் சிலைக்கு இன்று காலை 9 மணியளவில் மலர்தூவி மரியாதைச் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்ததினம் இன்று!
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_17_at_08_33_50.jpeg)
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்ததினம் இன்று!
அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
திமுக முப்பெரும் விழா; வேலூரில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் அண்ணா சாலையிலுள்ள, பெரியார் சிலைக்கு இன்று காலை 9 மணியளவில் மலர்தூவி மரியாதைச் செய்கிறார். அடுத்ததாக, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளிடம் ஒப்படைக்கிறார்.
வேலூர் மேல்மொணவூர் முகாமில் 55 தொகுப்புகளாக 220 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான கட்டுமானப் பணிகளை 02.11.2021 அன்று முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கே நேரில் வந்து அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்ற நிலையில், இன்றைய தினம் அந்த வீடுகளை முகாம்வாழ் தமிழர்களிடம் ஒப்படைக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_16_at_20_36_55.jpeg)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/8584c389_d259_4616_af45_42ea321d002d.jpg)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/a3a4ff70_78ab_4aef_8071_c239e5b22d35.jpg)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/d81c607c_6c35_46f9_9896_6ab706f0e13f.jpg)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_16_at_16_05_04.jpeg)
அதைத் தொடர்ந்து இன்று மாலை நடைபெறவிருக்கும் தி.மு.க-வின் முப்பெரும் விழாவில், ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஒரே சொடுக்கில், திட்டங்கள் அனைத்தையும் இந்த செயலி மூலம் தெரிந்துகொள்ள முடியும். அத்துடன் முதல்வர் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களையும், இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் தொடர்புகொண்டு கேள்விக் கேட்கலாம் எனக் கூறப்படுகிறது.