வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நம் ராணுவ அதிகாரிகள் இருவர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கடோல் வனப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்கும் பணி, கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்த நிலையில், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இந்த வனப்பகுதியில் குகை போன்ற மறைவிடங்கள் இருப்பது தெரிய வந்ததை அடுத்து, ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக தேடுதல் பணியை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர்.
பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில், கையெறி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் வீசினர். இதில், ஒரு பயங்கரவாதி காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்குள் பயங்கரவாதிகள் பதுங்காமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போஷ் க்ரீரி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement