![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/NTLRG_20230917162527029628.jpg)
ஒரு மாதத்திற்கு முன்பே லியோ அப்டேட்டை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 19ம் இப்படம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு விருது விழாவில் லோகேஷ் கனகராஜ்க்கு விக்ரம் படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது. இதே போல் கடந்த ஆண்டும் மாஸ்டர் படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது பெற்றார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் இந்த விழாவில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், லியோ படத்தின் புரமோஷன்களை ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். அதன்படி இன்று முதல் அப்படத்தின் அப்டேட்டை தொடங்கி விட்டோம். அதனால் இனிமேல் படம் திரைக்கு வரும் அக்டோபர் 19ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் லியோ படத்தின் அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.