ஹைதராபாத் : தெலுங்கானாவில், கால்வாயில் பெண் ஒருவர், தன் நான்கு குழந்தைகளையும் துாக்கி வீசியதுடன், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.
தெலுங்கானாவில் நாகர்குர்னுால் மாவட்டத்தின் மாங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா, 28. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் இருந்தனர். இதற்கிடையே, இவருக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள பாசன கால்வாய்க்கு சென்றார்.
முதலில், தன் நான்கு குழந்தைகளையும் கால்வாயில் துாக்கி வீசியதுடன், அவரும் தற்கொலை செய்ய குதித்தார். அங்கிருந்த உள்ளூர் மக்கள், லலிதாவை காப்பாற்றினர்.
ஆனால், அவரது மூன்று மகள்களும் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மகனின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement