ஜெயப்பூர்: ராஜஸ்தானில் கோட்டா நகரில் நீட் பயிற்சி மாணவிகள் தற்கொலை தொடர் கதையாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரம் ஐ.ஐ.டி – ஜே.இ.இ நுழைவுத்தேர்வு, நீட் நுழைவுத்தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் இடங்களில் முக்கியமானது. இங்கு
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் 16 வயது ரிச்சா சின்ஹா என்ற மாணவி விடுதியில் தங்கி, நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்தார்.. கடந்த சில வாரங்களுக்கு முன் தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இந்நிலையில் இன்று உ.பி. மாநிலம் மெள மாவட்டத்தைச் சேர்ந்த ப்ரியாசிங் என்ற 17 வயது நீட் பயிற்சி மாணவி, விடுதி அறையில் இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement