கைத்தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தொழில்நுட்ப அபிவிருத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கைத்தொழில் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய மற்றும் இடைநிலை சுயதொழில் முயற்சியாளர்களுக்காக அவர்களின் கைத்தொழில் அபிவிருத்திக்காக தலா ஒருவருக்கு 5இலட்சம் ரூபாய் வரையான அதிக பட்ச கடன் நிதியை தெரிவுசெய்யப்பட்ட 25பேருக்கு வழங்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தலைமையில் கைத்தொழில் அமைச்சில் நேற்று (18) இடம்பெற்றது.
ஆறு வீத வருடாந்த வட்டி வீதத்தில் 3வருடங்களில் மீளச் செலுத்தும் கால வரையறையின் கீழ் இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக தெரிவு செய்யப்பட்ட 25 துறை சார்ந்த சிறிய மற்றும் இடைநிலை சுயதொழில் முயற்சியாளர்களுக்கு 6.5மில்லியன் ரூபா முதற்கட்டமாக வழங்குவதற்கு தீர்மானிக்;கப்பட்டுள்ளது.
இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் அவர்களை வலுப்படுத்தும் 1969ஆம் ஆண்டு 36ஆம் இலக்க கைத்தொழில் அபிவிருத்திச் சட்டத்திற்கு இணங்க “54வருடங்களுக்குப் பிறகு கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத் துறை அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரணவின் வழிகாட்டலில் “கைத்தொழில் அபிவிருத்தி நிதியம் அண்மையில் நடைமுறைப்படுத்திய தேசிய கைத்தொழில் வாரம்” பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “கைத்தொழில் 2023” தேசிய கைத்தொழில் கண்காட்சியின் போது 10 மில்லியன் ரூபா முதற்கட்டமாக வழங்கி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போது 15மில்லியன் ரூபாவை வரை விருத்தியடைந்துள் இக்கைத்தொழில் அபிவிருத்தி நிதியம் அடுத்த வருடத்தில் ஒரு பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு கைத்தொழில் அபிவிருத்திச் சபை உத்தேசித்துள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண: அடுத்த வருடத்தில் சகல துறை சார் சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்க முடியும் விதமாக கைத்தொழில் அபிவிருத்தி நிதியத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர சுயதொழில் முயற்சிகளை முன்னேற்றுவதற்கு தொழில்நுட்ப அபிவிருத்திச் சபை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக அமைச்சர் தமது நன்றிகளைத் தெரிவித்தார்.