இலங்கை கிரிக்கெட்டில் பிரபல ‘ஊக்குவிப்பாளராக’ இருந்த பேர்சி அபேசேகரவுக்கு 5 மில்லியன் ரூபாவை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட நிர்வாக சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
‘ஒரு போட்டியை ஊக்குவிப்பவராக இலங்கை கிரிக்கெட் விளையாட்டிற்;கு பெர்சியின் பங்களிப்பு அளவிட முடியாதது. அவர் வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டுக்கும் பலம் தரும் தூணாகத் திகழ்ந்தார். அவரது நலம் குறித்து அறிந்து கொள்வதற்கு இதுவே எமக்குக் கிடைத்த சிறந்த தருணம்’ என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மொஹான் டி சில்வா, பெர்சி அபேசேகரவின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்ததுடன், இந்த நிதியுதவியை பேர்சி அபேசேகரவிடம் கையளித்துள்ளார்.