வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புது பார்லிமென்ட் லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் தாக்கல் செய்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நீண்ட தாமதத்துக்குப் பிறகு சட்டமாக மாற உள்ளது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை பிரதமர் மோடி நிருபித்துள்ளார். பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
காங்., தலைவர் கார்கே கூறுகையில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா ஏற்கனவே 2010ல் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டது என்பதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். என்றார்.
காங்., மூத்த தலைவர் சோனியா கூறுகையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது’ என்றார்.
சிறப்புமிக்க நாள்
பாஜ., எம்.பி சுஷில் மோடி கூறுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க நாள், அந்த பெருமை பிரதமர் மோடிக்கே உரித்தானது. இதற்காக இந்த நாட்டுப் பெண்கள் நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறார்கள். என்றார்.
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மகள் கவிதா கூறியிருப்பதாவது: மசோதா தாக்கல் செய்யப்பட்டதில் மகிழ்ச்சி. நாளை(செப்.,20) லோக்சபாவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். என்றார்.
வாழ்த்துகள்
லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் கூறியிருப்பதாவது: முதலில் நாட்டின் அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களுக்கான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த மசோதா நிறைவேறும் என்று நம்புகிறேன். பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
காத்திருங்கள்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என பார்லிமென்டிற்கு வெளியே செய்தியாளர்கள் ராகுலிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் ‘ சரியான நேரம் வரும் வரை நான் இந்த விவகாரத்தில் கருத்து கூற மாட்டேன்” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement