பெங்களூரு, பெங்களூரு பூங்காவில் ஏழு சிறுத்தை குட்டிகள் உயிரிழப்புக்கு, பூனையிடம் இருந்து பரவும், கொடிய வைரஸ் காரணம் என்று தெரியவந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு, பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 22ம் தேதி முதல், கடந்த, 5ம் தேதி வரை, பன்னரகட்டாவில் பராமரிக்கப்பட்டு வந்த, ஏழு சிறுத்தைக் குட்டிகள் ரத்த வாந்தி எடுத்து, மர்மமாக இறந்தன. சிறுத்தைகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஏழு சிறுத்தைகளும், வீட்டில் வளர்க்கப்படும் பூனையிடம் இருந்து பரவும், ‘பான்லுாகோபீனியா’ என்ற கொடிய வைரஸ் தாக்கி உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த ஏழு சிறுத்தைகளும், 1 வயதுக்கு உட்பட்டவை.
ஒரு வயதுக்கு முன்பு, சிறுத்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தக் கூடாது என்பதால், அவை வைரஸ் தாக்கி இறந்துள்ளன.சிறுத்தைகள் உயிரிழப்பைத் தடுக்க, 11 பேர் கொண்ட குழுவை, வனத்துறை அமைத்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement