விஜய் ஆண்டனி பிரபல நடிகரும், இசையமைப்பாளரும் ஆவார். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவரின் மூத்த மகள் விடியற்காலை 3 மணி அளவில் பேனில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவல் அறிந்து மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய் ஆண்டனி மகளின் திடீர் மரணம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் வந்தால் 104 -ஐ தொடர்பு கொள்ளவும்.