எலோன் மஸ்க் X (முன்பு ட்விட்டர்) தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அமல்படுத்தப்பட்டவுடன் X தளத்தை (முன்பு ட்விட்டர்) உபயோகிக்க பயனர்கள் ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டும். அவர் ஏன் இதைச் சொன்னார், பயனர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். X (முன்பு ட்விட்டர்) உரிமையாளர் எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கி அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் ட்விட்டரின் பெயரை X என்று மாற்றினார். மேலும் இலவசமாக வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக்கை பெற கட்டணம் போன்றவற்றை கொண்டு வந்தார். தற்போது X (முன்பு ட்விட்டர்) இதனை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு, மில்லியன் கணக்கான X (முன்பு ட்விட்டர்) பயனர்களை நிச்சயம் பாதிக்கும். மஸ்க் சமீபத்தில் ஒரு அறிக்கையை அளித்துள்ளார், வரும் காலங்களில் X (முன்பு ட்விட்டர்) தளத்தை இயக்க நீங்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அதில் கூறி உள்ளார்.
Elon Musk says X will charge users ‘a small monthly payment’ to use its service pic.twitter.com/6ly707YijV
— Insinstablog9ja) September 19, 2023
அவர் அத்தகைய அறிக்கையை வெளியிட்ட பிறகு, பயனர்கள் கட்டணம் பற்றி விவாதிக்க தொடங்கி உள்ளனர். நிறுவனம் ஏன் பயனர்களிடமிருந்து பணத்தை எடுக்கத் தயாராகிறது மற்றும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க முடியும் என்பதை பற்றிய சிறிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் ட்விட்டர் விளம்பர வருவாய் 60% குறைந்துள்ளது என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார். சிவில் உரிமைகள், பல நுகர்வோர் குழுக்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் ட்விட்டரில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. விளம்பரம் மூலம் நிறுவனம் பெரும் வருமானத்தை ஈட்டுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் தனியுரிமையை மனதில் வைத்து விளம்பரங்களைக் குறைக்க பல நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
உண்மையில், எலோன் மஸ்க்கும் இஸ்ரேல் பிரதமரும் நேரலையில் பேசிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், பிரதமர் நெதன்யாகு வெறுப்பு பேச்சு மற்றும் போட் ஆர்மி ஒரு பெரிய சவால் என்று வர்ணித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இஸ்ரேலில் மட்டுமின்றி இந்தியாவிலும் காணப்படுகின்றன.
எலான் மஸ்க் Xஐ இயக்க, பயனர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டணமாக சில ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார். மாறாக, பயனர்கள் விளம்பரங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். ஆனால், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும், எவ்வளவு காலத்திற்கு இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பயனர்கள் இன்னும் X பிரீமியம் (ப்ளூ டிக்) எடுக்க முடியும். இணையப் பதிப்பில் இதை பெற மாதக் கட்டணம் ரூ.650 மற்றும் மொபைல் பதிப்பில் ரூ.900 கட்டணம் செலுத்த வேண்டும். ஆண்டு சந்தாவாக ரூ. 6800 செலுத்த வேண்டும், இதில் பயனர்கள் பல கூடுதல் அம்சங்களுடன் ப்ளூ டிக் பெறுகிறார்கள். X ஆனது அமெரிக்காவில் பணப் பரிமாற்றியாக மாறுவதற்கான உரிமங்களைப் பெறுவதற்கும் பணிபுரிந்து வருகிறது, மேலும் பொதுப் பதிவுகளின்படி ஏற்கனவே எட்டு மாநிலங்களில் அனுமதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.