வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில், கனடாவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்ட பிரவின் பவன் குமார் ராய், பஞ்சாப் கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி எனவும் கனடாவில் உள்ள ‛ ரா’ அமைப்பின் தலைவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பார்லிமென்டில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் உயர் அதிகாரியை வெளியேற உத்தரவிடப்பட்டது. கனடாவில் உள்ள ‛ ரா’ அமைப்பின் தலைவர் பவன் குமார் ராயை வெளியேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளதாக கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கனடாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரூன் மெக்கேயை நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அவரிடம், இந்தியாவில் உள்ள கனடாவின் உயர் அதிகாரி ஒருவரை ஐந்து நாட்களுக்குள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கு நாடு திரும்பும் பிரவின் குமார் ராய் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் விபரம்
* பிரவின் குமார் 1997 ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த பஞ்சாப் கேடர் அதிகாரி
* பஞ்சாபில், காலிஸ்தான் பயங்கரவாதிகளை கையாண்டதில் சிறப்பாக கையாண்வர்
* கனடாவில் உள்ள ‛ ரா’ அமைப்பின் தலைவராக பணிபுரிந்தார்.
* தற்போது, ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் பிரவின் குமார் ராய்க்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு உள்ளது குறித்து கனடா பிரதமர் ஆதாரங்களை அளிக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
* வெளியுறவு அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் பிரவின் குமார் ராய் பணிபுரிந்துள்ளார்.
* இவர், 2009 மற்றும் 2010 காலகட்டத்தில் பஞ்சாபின் டார்ன் டரன் மாவட்டத்தில் காவல்துறையின் தலைமைப்பொறுப்பை வகித்துள்ளார்.
* ‛ ரா’ அமைப்பின் முன்னாள் தலைவரான சமந்த் குமார் கோயலுடன் பிரவின் குமார் ராய்க்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
* கடந்த 2018 ல் வெளியுறவு அமைச்சகத்தில் நியமிக்கப்பட்ட பிரவின் குமார் ராய், அதன் பிறகு கனடாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement