அமைச்சர் செந்தில் பாலாஜி: ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு!
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/06/WhatsApp_Image_2023_06_14_at_12_33_02.jpeg)
இதனிடையே ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி தரப்பு மனு, முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணை நடைபெற்றுவந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 20-ம்(இன்று) தேதிக்கு ஒத்திவைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஜாமீன் கோரிய வழக்கில் நீதிபதி அல்லி இன்று தீர்ப்பளிக்கிறார்.